பாஜக-விலிருந்து விலகி அமமுகவில் இணைந்தார் மோகன் வைத்யா

bjp ammk mohan vaidya
By Jon Mar 11, 2021 04:46 PM GMT
Report

பாஜகவிலிருந்து விலகிய மோகன் வைத்யா டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்து கொண்டார். கர்நாடக இசைப் பாடகர், இசைக் கலைஞர், வீணைக்கலைஞர் என பன்முக தன்மை கொண்டவர் மோகன் வைத்யா. புகழ்பெற்ற வீணை கலைஞர் ராஜேஷ் வைத்தியாவின் சகோதரரான இவர் டிவி தொடர்கள் , திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2ல் ‘நைனா’ என்று அழைக்கப்பட்ட மோகன் வைத்யா சில வாரங்களிலேயே போட்டியிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜகவிலிருந்து விலகி டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுக வில் இணைந்து கொண்டார்.