அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா மோடி? மோகன் பகவத் பேச்சால் சர்ச்சை
மோகன் பகவத்தின் பேச்சால் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.
மோகன் பகவத் பேச்சு
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத், "75 வயதானால், தலைவர்கள் ஓய்வு பெற்று, மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்" என பேசினார்.
மோகன்பகவத்தின் பேச்சு காரணமாக, பிரதமர் மோடி ஓய்வு பெற போகிறாரா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
மோடி ஓய்வா?
மோகன்பகவத்திற்கு வரும் செப்டம்பரில் 75 வயது ஆகுவதால், தனது பேச்சுப்படி, தானாக ஓய்வை அறிவிக்க உள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து கேள்வி எழுப்பிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், "பகவத் 75 வயதில் ஓய்வு பெற விரும்பினால், அதே விதி மோடிக்கும் பொருந்தும். அவருக்கும் இப்போது 74 வயது.
சமீபத்தில் குஜராத் சென்ற அமித்ஷா, தனது இரண்டு தசாப்த கால அரசியல் வாழ்க்கை போதுமானது, அரசியல் ஓய்வு பெற்ற பின்னர், வேதங்கள் மற்றும் உபநிடதங்களைப் படிப்பதோடு இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்தப் போவதாகக் கூறினார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே, பிரதமர் மோடி ஓய்வு பெற போகிறார் என்றும், பாஜக வெற்றி பெற்றால் வேறு ஒருவரே பிரதமராக பதவியேற்பார் என்றும் தகவல் வெளியானது.