நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சி - மோகன் பகவத் பகீரங்க குற்றச்சாட்டு

RSS populationpolicy mohanbhagwat
By Petchi Avudaiappan Oct 15, 2021 09:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடைபெறுகிறது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் குற்றம் சாட்டியுள்ளார். 

ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நடைபெற்ற தசரா பண்டிகை விழாவில் அதன் தலைவர்  மோகன் பகவத் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் மக்கள் தொகை கொள்கை மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். அதேபோல், இந்தக் கொள்கை அனைவருக்கும் சமமாக வகுக்கப்பட வேண்டும். மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு ஒரு பிரச்சனையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார். 

மேலும் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடைபெறுகிறது. சாதி மத அடிப்படையில் பிரிவினைகள் தூண்டிவிடப்படுகின்றன. அமைதியை நிலைநாட்டி தேசத்தை வலுப்படுத்த வேண்டும். நாட்டின் பிரிவினை சோகமான வரலாறு. இழந்த ஒருமைப்பாடு, ஒற்றுமையை மீட்டெடுக்க பிரிவினை வரலாற்றின் உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவின் தற்போதைய வரலாறு, மதம், பாரம்பரியங்களை கண்டிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.