''பாதுகாப்பு நடவடிக்கையினை கைவிட்டதுதான் கொரோனா 2 வது அலை பரவக் காரணம் '' -ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்

Mohan Bhagwat RSS leader
By Irumporai May 15, 2021 06:28 PM GMT
Report

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியது என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

ஆன்லைனில்' தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசினார்.

அதில் ,கொரோனா முதல் அலை பரவிய போது, அதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை, மக்கள் முழுமையாக பின்பற்றினர்.

முதல் அலை பரவல் குறைந்ததும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில், மக்கள் மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் அலட்சியம் காட்டியதுதான் காரணம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவை வென்று விடலாம். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வதை விடுத்து, தைரியத்தை கைவிடாமல் உறுதியாக இருந்தால் நெருக்கடியிலிருந்துவிரைவில் மீள்வோம் என பேசினார்.