பசுக்காவலர்கள் என்ற பெயரில் தாக்குதல்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் கண்டனம்

RSS Mohan bagawat cow protecters
By Petchi Avudaiappan Jul 05, 2021 09:06 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

தங்களை ஆதிக்க சக்தியாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் நினைத்துக்கொள்ளக்கூடாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் தங்களை இந்துக்கள் என கூறிக்கொள்ள தகுதியற்றவர்கள் எனக் விமர்சித்தார். 

மேலும் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அச்சத்தை சிலர் உருவாக்க நினைப்பதாகவும், அதுபோன்ற தவறான பேச்சுக்களில் இஸ்லாமியர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேபோல் இரு மதங்களுக்கு இடையேயான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். ஒருபோதும் ஒற்றுமைக்கான பணியை அரசியல் கட்சிகளிடம் ஒப்படைத்து விடக்கூடாது எனவும் மோகன் பகவத் கூறியுள்ளார்.

அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணமே மனதில் இருக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், பசுக்காவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவுக்கு எதிரானது என குறிப்பிட்டார்.