ஸ்கோர் என்னப்பா? சிராஜை வம்பிழுத்த இங்கிலாந்து ரசிகர்கள்- அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

siraj
By Fathima Aug 26, 2021 09:45 AM GMT
Report

இங்கிலாந்து- இந்தியா மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் நடந்து வருகிறது.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்த, இந்தியா வெறும் 78 ரன்களில் ஆட்டமிழந்தது.

கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் டக் அவுட் ஆகி வெளியேறினார் அடுத்து வந்த புஜாரா ஒரு ரன்களிலும், கோலி 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆண்டர்சன் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

ரோகித் சர்மா 19 ரன்களும், ரகானே 18 ரன்களும் எடுத்தனர். ரோகித் மற்றும் ரகானே தவிர மற்ற வீர்ரகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

40.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 78 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 

தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர், அப்போது பீல்டிங்கில் நின்றுகொண்டு இருந்த சிராஜிடம் ஸ்கோர் என்ன.? என்று இங்கிலாந்து ரசிகர்கள் வம்பிழுத்தனர்.

அதற்கு சிராஜ் 1-0 என சைகையில் டெஸ்ட் தொடரில் இந்தியா முன்னிலையில் இருப்பதைக் கூறி பதிலடி கொடுத்துள்ளார், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.