உங்க இஷ்டத்துக்கு ஏதாவது பேசாதீங்க - பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடுப்பான முகமது ஷமி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவான கருத்தை அணியின் சக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் திடீரென ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இந்த சூழலில் சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கோலி விலகினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதத்தை கூட அவர் அடிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே தனது பேட்டிங் பார்மை மீண்டும் பெற அவர் அப்பதவிகளை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
இதனிடையே கடந்த இரண்டு வருடங்களாக சதம் அடிக்க தடுமாறி வரும் விராட் கோலியை சில கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் தனது சிறப்பான பேட்டிங் மூலம் இந்திய அணிக்கு ரன்களை பெற்றுக் கொடுக்கிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
அவரது பேட்டியின் போது, விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்றால் என்ன? சதம் அடித்தால் தான் நல்ல வீரரா..? அவர் அடித்த மற்ற ரன்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா..? தேவையில்லாமல் யாரும் குறை சொல்ல தேவையில்லை.மேலும் விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது பந்து வீச்சாளர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவார் என்றும், எங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பார் என்றும் ஷமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.