அதிமுக எம்.பி முகம்மது ஜானின் மறைவு பேரிழப்பு - எஸ்.எம்.சுகுமார் உருக்கம்!
அதிமுகவின் ராஜ்ய சபா எம்.பி முகம்மது ஜான் நேற்று மாரடைப்பால் திடீரென காலமானார். ராணிப்பேட்டையில் அதிமுக ராஜ்யசபா எம்பியும் தமிழக வக்பு வாரிய தலைவருமான முகமது ஜான் அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சுகுமாரை ஆதரித்து பிரச்சாரத்திற்கு செல்லும்போது திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. அதிமுக, திமுக, மற்றும் இதர கட்சியினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனையடுத்து, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தனது குடும்பத்தோடு நேரில் வந்து மறைந்த ராஜ்யசபா எம்பிக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மறைந்த எம்பியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த ராஜ்யசபா எம்.பி. முகமது ஜான் தனது பிரச்சாரத்திற்கு கடந்த 10 நாட்களாக கடுமையாக உழைத்தார். அவரது மறைவு ஒரு பேரிழப்பு.
மிகப்பெரிய பொறுப்பில் இருந்தாலும் கூட அதை ஒருபோதும் காட்டிக்கொள்ளாமல் சிறிய நிர்வாகிகளுக்கு வழிவிட்டு அவர்கள் வளர்வதற்கு வாய்ப்பு கொடுத்தவர் என்று உருக்கமாக பேசினார்.