பாவம் அசீம்…மகேஸ்வரியை தொடர்ந்து, சீண்டி பார்த்து டார்கெட் செய்த தனலட்சுமி - வெளியான பரபரப்பு வீடியோ...!

Viral Video Bigg Boss
By Nandhini Nov 02, 2022 05:25 AM GMT
Report

பிக்பாஸ் வீட்டில் அசீம்மை சீண்டி பார்த்த தனலட்சுமி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். யாரும் எதிர்பார்க்காத விதமாக முதலில் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து கடந்த வாரம் அசல் கோளாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அசீமை திட்டித் தீர்த்த மகேஸ்வரி

இந்நிலையில், நேற்று பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ப்ரொமோ வெளியானது. அந்த ப்ரொமோவில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்த அசீமை மகேஸ்வரி கண்டப்படி திட்டினார். நீங்க சொல்லிக்கிட்டே இருக்கீங்க.. என்ன ஜர்ஜ்மெண்ட் படிச்சுட்டு வந்திருக்கீங்களா.. என் வேலையை சும்மா எனக்கு சொல்லிகொடுக்காதீங்க. உங்க வேலையை நீங்கள் கரெட்டா பண்ணா போதும்துன்னு அசிமை திட்டித் தீர்த்தார்.

இந்த ப்ரொமாவைப் பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த மனுசன்... இப்படி ஆயிட்டாரே.. அசீம் பழைய பார்முலாவுக்கு வாங்க.. என்று கமெண்ட் செய்து வந்தனர்.

சீண்டிப் பார்த்த தனலட்சுமி

இன்று சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நேற்று இரவு அசீம், மைனா, தனலட்சுமி பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அப்போது, தனலட்சுமி... எல்லாருக்கும் பிடிக்கிறமாதிரி ஆயிஷா நடந்துக் கொள்வதை அவ மாற்றிக்கொள்ளணும்ன்னு சொல்ல, உடனே அசீம், அவ அப்படிதான் வெளியே எப்படி இருந்தாலோ அப்படியேதான் இங்கு இருக்கிறாள் என்று சாதாரணமாக சொல்லிக்கொண்டிருக்க... உடனே தனலட்சுமி அசீமிடம் சண்டைக்கு இழுப்பது போல சீண்டி பார்த்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அசீம் ஏன் கோபப்பட்டார்ன்னு இப்போதான் தெரியுது... சும்மா இருக்கும் அசீம்மை ஏன் சீண்டி, சீண்டி பார்க்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.     

mohammed-azeem-dhanalaxmi-bigboss