எச்சிலை காரி துப்பி சாப்பாடு கொடுப்பேன்... - பிக்பாஸ் வீட்டில் அசீமுக்கும், விக்ரமுக்கும் பயங்கர சண்டை..!
எச்சிலை காரி துப்பி சாப்பாடு கொடுப்பேன் என்று அசீம் சொன்னதால் விக்ரமிற்கும், அசீமுக்கும் அடித்துக் கொள்ளும் அளவிற்கு பிக்பாஸ் வீட்டில் சண்டை வெடித்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பட்டத்து இளவரசியான ஜனனி
நேற்று பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுக்கு ராஜகுடும்பம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேரக்டருக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
நேற்று ஜனனி பிக்பாஸ் வீட்டில் டாஸ் ஒன்றில் பட்டத்து இளவரசியாக சக போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், மைனாவிற்கோ ஒருவரும் ஒரு ஓட்டுக்கூட போடாததால் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அசீமுக்கும், விக்ரமிற்கும் பயங்கர சண்டை
இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது.
இந்த ப்ரொமோவில், அசீம் விக்ரமைப் பார்த்து உங்க சாப்பாட்டில் நான் காரி துப்பி கொடுப்போம்.. அதை நீங்கள் சாப்பிடணும் என்று சொல்ல... இருவருக்குள்ளும் பயங்கர சண்டை வெடிக்கிறது. ஏய்.. நீ.. போ.. வா... என்று ஒருவருக்குள் ஒருவர் பயங்கரமாக முட்டிக்கொண்டு அடித்துக்கொள்ளும் அளவிற்கு சண்டை போட்டுள்ளனர்.
இவர்களது சண்டையைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து இருவரையும் விலக வைத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#Day38 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/Gn6FEnxx5x
— Vijay Television (@vijaytelevision) November 16, 2022