ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை வெளியீடு : சிறந்த பேட்ஸ்மேனாக முதலிடத்தைப் பிடித்தார் பாக். வீரர் முகமது ரிஸ்வான்...!
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை தற்போது வெளியாகியுள்ளது. இதில், பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இரு பிரிவுகளாக 6 அணிகள்
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
பாகிஸ்தான் த்ரில் வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இன்று நேருக்கு நேர் மோத இருக்கின்றன.
இன்று நடைபெபெறும் இப்போட்டியில் ஜெயித்தால் மட்டுமே இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க முடியும்.20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டத்தில் மோதி இருக்கின்றன. இரண்டிலும் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால், இரு அணி வீரர்களும் பலத்த பலபரீட்சையில் இறங்கியுள்ளனர்.
முதலிடம் பிடித்த பாக். வீரர் முகமது ரிஸ்வான்
இந்நிலையில், போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டிருக்கிறது.
அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதல் இடம் பிடித்திருக்கிறார்.
தற்போது துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரிஸ்வான் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை இவர் பிடித்துள்ளார். 2-வது இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உள்ளார். 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரமும், 4-வது இடத்தில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் உள்ளனர்.
அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில் வுட் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஷம்சி நீடிக்கிறார். 3-வது இடத்தில் இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் இருக்கிறார்.