"யாரு சாமி நீ?” : வீசிய 24 பந்துகளில் 22 டாட் பால்கள் - சர்வதேச அணிகளுக்கு சவால் விடும் ஆப்கன் பந்துவீச்சாளர்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் 22 டாட் பந்துகளை வீசி ஆப்கானிஸ்தான் வீரர் அசத்தியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதற்சுற்று மற்றும் பயிற்சி ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் நேற்று மோதியது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. ஆனால் சவாலான இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் முகமது நபி, 4 ஓவர்கள் பந்துவீசி, 2 மெயிடன் ஓவர்களுடன் வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் மொத்தம் வீசிய 24 பந்துகளில் 22 டாட் பந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil
