No Ball சர்ச்சை - அர்ஷ்தீப் சற்று நிதானமாக விளையாட வேண்டும் - முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து...!

Cricket Indian Cricket Team
By Nandhini Jan 28, 2023 04:01 PM GMT
Report

அர்ஷ்தீப் சற்று நிதானமாக விளையாட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி -

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

நேற்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.

இப்போட்டியின் இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. அர்ஷ்தீப் சிங்கின் தொடர் நோ-பால் மீறல்கள் இந்த மாத தொடக்கத்தில் இலங்கை ஆட்டத்தைத் தொடர்ந்து, அர்ஷ்தீப் தொடர்ச்சியான நோ-பால்களை வீசி வருகிறார்.

இதனால், சமூகவலைத்தளங்களில் அர்ஷ்தீப் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார். இவருடைய நோ பாலால் இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

mohammad-kaif-no-ball-arshdeep-singh-cricket

நிதானமாக விளையாட வேண்டும்

இந்நிலையில், அர்ஷ்தீப் சிங் நோ பால் வீசுவது குறித்து இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைப் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

அர்ஷ்தீப் தனது நோ-பால் பிழைகளை சரிசெய்ய தனது ரன்-அப்பைக் குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும். அர்ஷ்தீப்புக்கு நீண்ட ரன்-அப் இருக்கிறது. சக்திகளை வீணடித்து வருகிறார். அவர் வீசும் நோ-பால்களுக்கு முக்கிய காரணம் அவரது நீண்ட ரன்-அப் தான். எனவே, அவர் அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும் மற்றும் சற்று நிதானமாக இருக்க வேண்டும். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர் என்றார்.