World Cup: இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இதுதான் - முன்னாள் வீரர் அதிர்ச்சி கருத்து!

Jiyath
in கிரிக்கெட்Report this article
உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் பேசியுள்ளார்.
இந்தியா தோல்வி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.
இந்த தோல்வியால் இந்திய அணி வீரர்களும், ரசிகர்களும் மிகுந்த வேதனை அடைந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது "நான் இறுதிப்போட்டிக்காக நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இருந்தேன், ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் 3 நாட்கள் ஆடுகளத்தை சரிபார்த்ததைப் பார்த்தேன். ஆடுகளத்தின் நிறம் மாறியது.
மிகப்பெரிய பொய்
ஆடுகளத்தில் புற்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. ஆடுகளத்தின் தன்மையை மாற்றுவது பற்றி நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்று ஹோம் டீமில் யாராவது சொன்னால், அது மிகப்பெரிய பொய்.
ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு தகுந்தார் போல் மாற்றுவதற்கு முயற்சிக்காமல், தட்டையான ஆடுகளத்தில் விளையாடியிருந்தால் இந்தியா எளிதாக உலகக் கோப்பையை வென்றிருக்கும்.
ஏனென்றால் இந்திய அணியில் எங்களிடம் சாம்பியன் வீரர்கள் இருந்தனர், ஆனால் ஆடுகளத்தை மாற்றுவதற்கான முயற்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் அணி சிக்கிக்கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.