இந்தியாவுடனான போட்டியால் பாகிஸ்தான் வீரருக்கு நேர்ந்த கதி..!
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர் 24) நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியது. இந்த வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.இதனிடையே பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்தை வென்றது.
இந்த போட்டி தொடக்கத்திற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸிடம், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றி குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹபீஸ், "இந்தியா உடனான போட்டியில் வென்ற பிறகு மற்ற வீரர்களை காட்டிலும் நான் தான் மிக மிக சத்தமாக கத்தினேன். எனக்கு தொண்டை இன்னும் கூட வலிக்கிறது. இது எங்கள் அனைவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு வெற்றி" என்று தெரிவித்துள்ளார்.