வலிமை படத்தைப் பார்த்து வியந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் - வைரலாகும் வீடியோ

Ajith valimai moeenali BoneyKapoor
By Petchi Avudaiappan Feb 24, 2022 04:34 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி கருத்து தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குநர் எச்.வினோத், நடிகர் அஜித்,யுவன் சங்கர் ராஜா கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ள வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, கால்பந்து போட்டி நடக்கும் இடம் என உலகமெங்கும் தங்களது கவலையை வெளிப்படுத்தினர். 

குறிப்பாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு வந்த அஜித்தின் ரசிகர்கள் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி பீல்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அலிபாய் என்று அழைத்து, வலிமை அப்டேட் என்கிறார். அதை கேட்ட மொயீன் அலி, ஏதுமறியாமல் போல சிரிக்கிறார். இந்த வீடியோ அந்த சமயத்தில்  இணையத்தில் வைரலானது. இதனை கண்டிக்கும் வகையில் நடிகர் அஜித் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், வலிமை திரைப்படம் இன்று உலகம் ழுழுவதும் வெளியாகி உள்ள நிலையில் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு என்னிடம் மைதானத்தில் வலிமை அப்பேட் கேட்டார்கள். அப்போது, அது எனக்கு என்னவென்று புரியவில்லை. நான் தினேஷ் கார்த்திக்கிடம் வலிமை என்றால் என்ன என்று கேட்டேன் அது ஒரு படம் என அவர் கூறினார். 

தொடர்ந்து அதுதொடர்பாக இணையத்தில் தேடினேன். நீண்ட காலமாக அந்த படம் வெளியே வர வேண்டும் என்று மக்கள் ஆர்வமாக இருப்பதை புரிந்து கொண்ட நிலையில் படம் குறித்த வீடியோக்கள், இணைப்புகளை எனக்கு ரசிகர்கள் தொடர்ந்து அனுப்பினர். இதனால் அந்த படத்தை காண நான் ஆர்வமாக இருக்கிறேன் என மொயீன் அலி குறிப்பிட்டுள்ளார்.