சென்னை அணிக்கு வருகை தந்த மிக முக்கிய வீரர் - கொண்டாடும் ரசிகர்கள்
ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் சென்னை அணிக்கு மிக முக்கிய வீரர் வருகை தரவுள்ளது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முந்தைய சீசனில் விளையாடிய வீரர்கள் பலர் இரு அணிகளிலும் இல்லாத நிலையில் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ஆல் ரவுண்டர் மொயீன் அலி, முதல் போட்டியில் விளையாட மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Packed and Ready! ?⏳
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2022
Read MOre ⬇️#WhistlePodu #Yellove ??
அவருக்கு விசா கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டது. பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு எவ்வித கேள்விகளும் இன்றி சில நாட்களிலேயே விசா கிடைத்துவிடும். ஆனால் மொயீன் அலிக்கு 20 நாட்கள் ஆகியும் விசா கிடைக்கவில்லை.அரசியல் காரணங்களுக்காக தான் மொயின் அலிக்கு விசா வழங்கப்படவில்லை என்ற பெரும் சர்ச்சை உருவானது.
இதனையடுத்து சென்னை அணி நிர்வாகம், பிசிசிஐயிடம் புகார் அளித்து விசா கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் பிசிசிஐ அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக மொயீன் அலிக்கு இந்தியா வர விசா கிடைத்துள்ளது. இதனை வீடியோ மூலம் வெளியிட்ட மொயீன் அலி ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளதாகவும், அடுத்த விமானத்திலேயே மும்பை வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.