பிரதமரின் தாயார் மறைவு : குஜராத் செல்லும் முதலமைச்சர்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) உடல்நல குறைவால் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
குஜராத்தில் தகனம்
இதன்பின்னர் தாயார் உடலை தோளில் சுமந்து சென்றதுடன் இறுதி சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு குடியரசு தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழகத்தலைவர்கள் பயணம்
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பிரதமர் மோடி தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க 12 மணி விமானத்தில் அகமதாபாத் செல்கிறார், அதே போல் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஈபிஎஸ் - ஓபிஎஸ் வெவ்வேறு விமானத்தில் அகமதாபாத் செல்கின்றனர்