கண் கலங்கியபடி .. மயானத்தில் தாயின் சிதைக்கு தீ மூட்டினார் பிரதமர் மோடி

BJP Narendra Modi
By Irumporai Dec 30, 2022 04:33 AM GMT
Report

பிரதமர் மோடியின் தாயார் ஹீரபென் உடல் தகனம் செய்யப்பட்டது.

மோடியின் தாயார் மரணம்

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மயானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) உடல்நல குறைவால் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

கண் கலங்கியபடி .. மயானத்தில் தாயின் சிதைக்கு தீ மூட்டினார் பிரதமர் மோடி | Modis Mother Heeraben Cremated

குஜராத்தில் தகனம் 

இதன்பின்னர் தாயார் உடலை தோளில் சுமந்து சென்றதுடன் இறுதி சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு குடியரசு தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.