மோடி மனதளவில் உடைந்துவிட்டார்..உடல் மொழியை கவனித்தீற்களா? ராகுல் காந்தி
மோடி மனதளவில் உடைந்துவிட்டார் என கிண்டல் செய்த ராகுல் காந்தி வீடியோ வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தி
ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கபட்டதில் இருந்து அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் 2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர். ஜம்முவில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
மோடி
அப்போது பேசிய அவர், மனதளவில் மோடியின் நம்பிக்கையை அழித்துவிட்டது. அவர் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப்படவில்லை, காங்கிரஸ் கட்சியின் கொள்கை, இந்தியா கூட்டணியின் அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் இருந்த மோடியின் உடல்மொழி தேர்தலுக்குப் பின்னர் முற்றிலுமாக மாறியுள்ளது. இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர், யூனியன் பிரதேசங்கள் எல்லாம் மாநிலங்களாக மாற்றப்பட்டபோது, ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமானது.
இதுபோன்று முன்னதாக நடக்கவில்லை. எனவேதான் ஜம்மு காஷ்மீர் மக்கள், எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் முக்கியம். ஜம்மு காஷ்மீர் மக்களின் இதயத்தில் உள்ள சோகம், அச்சத்தை ஒழிப்பதே எனது நோக்கம். மேலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் பயத்தையும், துயரத்தையும் காங்கிரஸ் கட்சி துடைக்க விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | Jammu, J&K: Lok Sabha LoP & Congress MP Rahul Gandhi says, "You fight for us and it's a battle of ideologies - between Congress and RSS... I sit in parliament, I see him (PM Modi). I can tell you that you have finished the confidence of PM Modi. Congress workers have… pic.twitter.com/H3cPOcCNIa
— ANI (@ANI) August 22, 2024