ஜனாதிபதியினை மதிக்காமல் சென்றாரா பிரதமர் மோடி? - வைரலாகும் வீடியோ
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு வணக்கம் சொல்லும்போது, பதிலுக்கு வணக்கம் சொல்லாமல் கேமராவை பார்ப்பது போன்ற காட்சி இணையத்தில் வைரலானது.
ராம்நாத் கோவிந்த்
கடந்த வாரம் நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கானத் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றிபெற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி முடிவுபெறுவதையொட்டி, நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையநாயுடு, சபாநாயகர் ஓம்பிர்லா, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ऐसा अपमान Very Sorry Sir
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) July 24, 2022
ये लोग ऐसे ही हैं, आपका कार्यकाल ख़त्म अब आपकी तरफ़ देखेंगे भी नही। pic.twitter.com/xaGIOkuyDM
அப்போது விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விழாவிற்கு வந்திருந்த முக்கிய தலைவர்களுக்கு வணக்கம் செலுத்திய படி வந்தார், அப்போது விழாவுக்கு வந்திருந்த பிரதமர் மோடிக்கு ராம்நாத் கோவிந்த் வணக்கம் வைத்தார். பதிலுக்கு பிதமர் மோடியும் வணக்கம் வைத்து விட்டு அங்கிருந்த கேமராவை பார்த்தபடி நின்றார்.
பிரதமர் மோடி வீடியோ
அப்போது அங்கிருந்த ராம்நாத் கோவிந்தினை கவனிக்காதவாறு பிரதமர் இருப்பது போல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது , குறிப்பாக இந்த வீடியோவிற்கு எதிர் கட்சி தலைவர்கள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இந்த நிலையில் எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக பாஜகவினர் இந்த காட்சிக்கு முந்தைய, அதாவது பிரதமர் வணக்கம் சொல்லும்போது குடியரசுத் தலைவரும் வணக்கம் சொல்லும் காட்சிகளைப் பகிர்ந்து வருகின்றனர்
இதுதான் முழு வீடியோ என்றும் கட் செய்த வீடியோவை பதிவிட்டு காங்கிரஸ் ஆதாயம் தேடுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.