தமிழ் புத்தாண்டு: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

Sinhala and Tamil New Year Narendra Modi
By Fathima Apr 14, 2026 03:38 AM GMT
Report

தமிழ் புத்தாண்டு நாளன்று தமிழ் மொழியில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பராபவ தமிழ் புத்தாண்டு இன்றைய தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

அதில், புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள், இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும் நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன்.

தமிழ் புத்தாண்டு: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து | Modi Wishes In Tamil For Tamil New Year

சிறப்புமிக்க இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும், இது தமிழ் பண்பாட்டின் பெருமையை போற்றும் ஒரு தருணமாகும்.

அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.

சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும், மகத்தான தமிழ் பண்பாட்டால் உத்வேகம் பெற்று நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் புத்தாண்டு: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து | Modi Wishes In Tamil For Tamil New Year