அணை கட்ட நிச்சயமா மோடி சம்மதிக்கமாட்டார் ...நம்பிக்கையோடு இருக்கும் அண்ணாமலை !
கர்நாடக அரசு மேகதாது அணைகட்ட தீவிரம் காட்டிவருகிறாது புதிதாக அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என தீர்க்கமாகத் தெரிவித்துள்ளார்.
பசவராஜின் இந்த பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மேகதாது அணைகட்ட ஒரு செங்கல்கூட வைக்கமுடியாது என பதிலடிக் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து மேகதாது திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட பிரதமர் மோடி நிச்சயம் சம்மதிக்க மாட்டார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 5ஆம் தேதி திட்டமிட்டபடி தஞ்சாவூரில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே மேகதாது அணைக்கு எதிராக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருப்பேன் என கூறிய போது அது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என கர்நாடக புதிய முதலவர் பசவராஜ் பொம்மை கூறியது குறிப்பிடதக்கது.