இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி..! திருச்சியில் உச்சக்கட்டு பாதுகாப்பு.!
நாட்டின் பிரதமர் மோடி, இன்று (02-01-2024) தமிழகம் வரவுள்ளதால் முன்னெச்சரிக்கை பணிக்காக போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் வருகை
திருச்சி விமான நிலையத்தில் புதியதாக முனையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் இந்த விமான முனையத்தை மக்களின் பயன்பாட்டிற்காக நாட்டின் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
அதே போல, திருச்சியில் ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் போக்குவரத்து மற்றும் உயர்கல்வித் துறைகள் போன்ற துறைகள் தொடர்பான ரூ.19,850 கோடிக்கு மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருக்கின்றார்.
உச்சகட்ட பாதுகாப்பு
இதற்காக, இன்று (02-01-2024) காலை 7 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையவுள்ளார்.
நடைபெறவுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ள இருக்கின்றார்.
அதனை தொடர்ந்து சாலை மார்கமாக 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்று அங்கு புதிய முனையத்தை திறந்து வைக்கவுள்ளார். பிரதமரின் திருச்சி வருகையை முன்னிட்டு மாநகர் முழுவதும் பெரும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.