புதுச்சேரிக்கு இன்று பிரதமர் மோடி வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு
புதுச்சேரிக்கு இன்று பிரதமர் மோடி வருகை தருகிறார். அதனையடுத்து, புதுச்சேரியில் அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அவர் பயணம் செய்யும் சாலை வழித்தடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக அரசியல் களம் சற்று சூடுபிடித்து பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். இவர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து தேர்தல் பரப்புரை நிகழ்த்த உள்ளார்.
அவர் பயணம் செய்யும் சாலை வழித்தடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர். மாநில காவல்துறையினருடன் டெல்லியிலிருந்து சிறப்பு அதிகாரிகளும், இந்த ஒத்திகையில் கலந்து கொண்டுள்ளனர். வழியெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.