பிரதமர் மோடியை கேலி பேசிய 3 அமைச்சர்கள்; உடனடி சஸ்பெண்ட் - பின்னணி!
மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மோடி லட்சத்தீவு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்றிருந்தார். அதன்பின், தனது பயண அனுபவத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் அதனை விமர்சிக்குமாறு சர்ச்சை பதிவை பகிர்ந்துள்ளனர். அது தற்போது கவனம் பெற்றுள்ளது.
சர்ச்சை கருத்து
‘கோமாளி’,‘பொம்மை’ என்று விமர்சிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து அந்நாட்டு அமைச்சர்களின் இழிவான கருத்துகள் குறித்து இந்தியா மாலத்தீவு அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்த மூன்று அமைச்சர்களும் மாலத்தீவுகள் அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தரக்குறைவான கருத்துக்கள் பதிவேற்றப்பட்டு இருப்பது அரசின் கவனத்துக்கு வந்திருகிறது. இந்த கருத்துகள் தனிப்பட்டவை.
அவை மாலத்தீவுகள் அரசாங்கத்தின் கருத்துகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இதுபோன்ற தரக்குறைவான கருத்துகளை கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்க மாட்டார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.