ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு - பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார்
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறது. உச்சி மாநாடு கடைசிய கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு கொரோனா காரணமாக உச்சி மாநாடு நடைபெறவில்லை.

பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார்
இந்நிலையில், இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட 15 உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கிளம்பி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரை சென்றடைந்தார். பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ் வரவேற்றார்.
Landed in Samarkand to take part in the SCO Summit. pic.twitter.com/xaZ0pkjHD1
— Narendra Modi (@narendramodi) September 15, 2022
PM Modi’s warm welcome in Samarkand, Uzbekistan as he lands there to attend the SCO Summit.
— BJP (@BJP4India) September 16, 2022
Just feel the love and respect for India. pic.twitter.com/4XIBBQcT9i