ஹிந்தி மொழி இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சேர்த்துள்ளது : பிரதமர் மோடி டுவிட்

Twitter Narendra Modi
By Nandhini Sep 14, 2022 08:31 AM GMT
Report

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தி மொழி தினத்தையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பதிவில் -

ஹிந்தி மொழி இந்தியாவுக்கு உலக அளவில் சிறப்பு பெருமை சேர்த்துள்ளது. அதன் எளிமை, தன்னிச்சையான தன்மை மற்றும் உணர்வு திறன் எப்போதும் மக்களை ஈர்க்கிறது. நாட்டின் மிகப்பெரிய பேசும் மொழியை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் அயராது முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.     

modi