எங்கள் முன்னாள் பிரதமர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்: ட்வீட் போட்ட பிரதமர் மோடி!

covid19 modi tweet
By Irumporai Apr 19, 2021 04:33 PM GMT
Report

 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே சமயம் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனால், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியானதால் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், எங்கள் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜி நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவியும் மார்ச் மாதம் 4-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.