விஷ்ணுவின் 11-வது அவதாரமாக மாற நினைக்கிறார் மோடி - கார்கே சாடல்

Indian National Congress Narendra Modi
By Karthick Jan 29, 2024 12:43 AM GMT
Report

இந்தியாவிற்காக பாஜக என்ன செய்தது என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.

உரை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பேரணியை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே துவங்கி வைத்தார்.

modi-trying-to-become-11th-avatar-of-vishnu-kharge

அதன் பின்னர் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது , காங்கிரஸ் தலைவர்கள் இந்த நாட்டுக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்துள்ளனர் என குறிப்பிட்டு, பாஜக இந்திய நாட்டிற்காக என்ன தியாகம் செய்தது...? என வினவினார்.

11-வது அவதாரம்

மேலும், மதத்தின் பெயரால் பாஜக வெற்றி பெறுவதை அனுமதிக்கக்கூடாது என மக்களிடம் கேட்டுக்கொண்ட அவர், இந்தியாவின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர் என்றும் தெரிவித்து, மகாத்மா காந்தி, நேரு போன்றோர் இந்திய விடுதலைக்காக பல ஆண்டுகளை சிறையில் கழித்தனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

modi-trying-to-become-11th-avatar-of-vishnu-kharge

ஆனால், பாஜக இந்தியாவிற்காக என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்பி, பிரதமர் மோடி விஷ்ணுவின் 11-வது அவதாரமாக மாற நினைக்கிறார் என கடுமையாக சாடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை மக்கள் தோற்கடிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.