கொரோனா தடுப்பூசி: மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை
modi-trump-usa-america-india-poltical
By Jon
கரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் கரோனா தடுப்பூசியை விநியோகிக்க மாநிலங்களில் செய்யப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி பங்கேற்றுள்ளார்.