டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை - பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்

modi-trump-usa-america-india-poltical
By Jon Jan 09, 2021 12:55 PM GMT
Report

அமெரிக்க்காவில் அதிபர்டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மேடி கண்டனம் தெரிவித்துள்ளார்.. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும் வெற்றி பெற்றார்.ஆனால், ஜோபைடனின் வெற்றியை டிரம்ப் ஏற்கமால் அடம் பிடித்தார்.

நடைபெற்ற தேர்தலில் மோசடிகள் நடந்ததாக குற்றம்சாட்டிய டிரம்ப், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதிலும் தோல்வியினையே கண்டார். இந்த நிலையில், ஜோ பைடன் வெற்றியை உறுதிசெய்து, சான்று அளிக்கும் நிகழ்வு, நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தது.

அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் வன்முறையில் இறங்கினர். வன்முறையில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் கவல்துறையினர் கலைத்தனர்.

இதனால் பெரும் பதற்றம் தடுக்க பட்டது. ஆனால் அமெரிக்க அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த வன்முறைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்.


வாஷிங்டனில் நடந்துள்ள கலவரம் மற்றும் வன்முறை தொடர்பான செய்திகளை கண்டு மன வேதனை அடைந்தேன். ஒழுங்குமுறையுடனும், அமைதியுடனும் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும்.

சட்ட விரோத போராட்டங்கள் வழியாக ஜனநாயக செயல்முறைகளை தகர்த்து எறிவதை அனுமதிக்க முடியாது. என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.