Friday, Jul 18, 2025

மிரட்டும் கொரோனா மீண்டும் ஊரடங்கா ? - பிரதமர் மோடி இன்று ஆலோசனை

covid19 lockdown meeting pmmodi
By Irumporai 4 years ago
Report

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி  இன்று மாலை 4.30 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

டெல்லியில் இன்று 4.30 மணிக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறப்பு எண்ணிக்கை 327ஆக பதிவாகியுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,28,004 ஆக உள்ளது. அதே போல் நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,623 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் , இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டிய நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஏற்கனவே, கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.