தமிழக கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு - தேர்தல் பணியிலும் தீவிரம் காட்டும் பிரதமர் மோடி..!

Tamil nadu BJP Narendra Modi K. Annamalai
By Karthick Jan 18, 2024 08:47 PM GMT
Report

வரும் நாடாளுமன்ற தேர்தல் ஆளும் மத்திய பாஜகவிற்கு முக்கியமான தேர்தலாகவே பார்க்கப்படுகிறது.

தேர்தல்

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் மத்திய பாஜக அரசிற்கு பெரும் சவாலான ஒன்றாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பிரதமர் சென்னை வருகை - சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள்..!

பிரதமர் சென்னை வருகை - சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள்..!

10 ஆண்டுகள் ஆட்சியை நிறைவுசெய்யும் அக்கட்சி, மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பெரும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அக்கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அதிமுக வெளியேறியது சற்று பின்னடைவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

modi-to-attend-party-meeting-today-in-tamil-nadu

புது கூட்டணியை மாநிலத்தை பொறுத்தவரையில் அமைத்து தேர்தலை சந்திக்கும் நெருக்கடியில் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

சந்திப்பு

இன்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை துவங்கி வைக்க சென்னைக்கு வரும் பிரதமர் மோடி, கட்சி நிர்வாகிகளையும் சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

modi-to-attend-party-meeting-today-in-tamil-nadu

இது கட்சி சந்திப்பே என்றாலும், நிச்சயமாக கூட்டணி விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.