மோடி ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்தேன் : வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்த திருமா
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாள் கடந்த ஆகஸ்டு மாதம் 17 - ம் தேதி கொண்டாடப்பட்டது , இவரது பிறந்த நாளை விடுதலை சிறுத்தை கட்சித் தொண்டர்கள் எழுச்சிநாளாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் நடந்த பிறந்த நாள் விழாவின் போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் :
இன்றைக்கு இருப்பது போல் 30 ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவரும் நெருக்கமாக பழகி இருந்தால் நானே ஒரு பெண்ணை பார்த்து அவருக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பேன் என கூறியிருந்தார்.'

இந்த நிலையில் பிரபல செய்தி தொலைக்காட்சியில் பங்கேற்ற திருமாவளவன் தனது இளமை கால வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது திருமாவிடம் நெறியாளர் திருமாஅலவினடம் படிப்பு முடித்தவுடன் அதாவது உங்களுக்கு அரசு வேலை வரும் முன்பு என்ன வேலை செய்தீர்கள் என கேட்டார்,
அதற்கு பதில் அளித்த திருமாவளவன். கல்லூரி படிப்பினை முடித்தவுடன் நான் ஒரு ஜெராக்ஸ் கடையில் பணியாற்றினேன் , அந்த சமயம் தான் தமிழகத்திற்கு ஜெராக்ஸ் அறிமுகமாயிருந்த சமயம் மோடி ஜெராக்ஸ் என்ற பெயரில் அதில்தான் பணியாற்றினேன் என கூறினார், ஓ அப்போதே மோடி எனக் கூறி சிரிக்க
அதன்பிறகு சென்னையில் இருந்த ஹோட்டல் ஒன்றில் ஒரு மணி நேரம் சப்ளையராக பணியாற்றியதகாவும் அதன்பிந்தான் தனது அரசியல் பாதையினை தொடங்கியதாகவும் திருமாவளவன் அந்த பேட்டியில் கூறினார்.
பிற்ந்த நாள் விழாவின் போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தொல் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த அரங்கில் மட்டும் அல்ல பல ஊர்களில் உள்ள சிறுத்தை குட்டிகள் தான் அவரது பிள்ளைகள்.
அந்த பிள்ளைகளுக்கு எல்லாம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் உங்களுக்கு தாயும், தந்தையுமாக இருக்க கூடிய திருமாவளவனை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்கள் அனைவரிடமும் இருக்கிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.