இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்.. திருக்குறள் மூலம் மோடியினை கிண்டல் செய்த ப. சிதம்பரம்
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 7 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இந்த நிலையில் திருக்குறளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் விமர்ட்சித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமது 7-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த நிலையில் பாஜக அரசினை கிண்டல் செய்யும் விதமாக ப. சிதம்பரம் தனது ட்வீட்டரில் பதிவு ஒன்றை வைத்துள்ளார்.
அவரது பதிவில்: பணவீக்க வீழ்ச்சி, தொழில்துறை வீழ்ச்சி, பணமதிப்பு வீழ்ச்சி, பங்குச் சந்தை வீழ்ச்சி என 7 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது மோடி அரசு வரி விதிப்பு சீரழிவு, வேலைவாய்ப்பின்மை என பொதுமக்களை வறுமையின் பிடியில் சிக்க வைத்துள்ளது.
மோடியின் 7 ஆண்டுகால அரசு. அதே போல 2016 பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மேலே சொன்னவைதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்புகள்.
பணமதிப்பிழப்புக்குப் பிறகு மத்திய ( பாஜக )அரசின் ஒவ்வொரு முடிவுகளும் தவறான திசையில்தான் இருக்கிறது அவற்றை ஏற்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது .
யார் பேச்சையும் கேட்காமல் மோடி பிடிவாதம் பிடித்துவருவதால் 488-வது திருக்குறளை மோடிக்கு நினைவுபடுத்த வேண்டி உள்ளது என குறிபிட்டு அந்த குரலையும் குறிப்பிட்டுள்ளார்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
விளக்கம்: (அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்- )
இதன் மூலம் பிரதமர் மோடி யார் ஆலோசனையினையும் கேட்பதில்லை என்பதை தனது ட்வீட்டர் பதிவின் மூலம் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Mr Modi’s fault is that he will not tolerate criticism or heed well-meaning advice of distinguished economists
— P. Chidambaram (@PChidambaram_IN) April 13, 2021
Remember Kural 448:
“The king, without the guard of men who will rebuke him, will perish though there is none to destroy him”