18% ஆக வரி குறைப்பு: டிரம்ப்-க்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
இந்தியா மீதான வரியை 18 சதவிகிதமாக குறைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்-க்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
இந்திய பொருட்கள் மீதான பரஸ்பர வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
மோடி மற்றும் டிரம்ப் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, இது இறுதிசெய்யப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

டிரம்ப் பதிவு
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட பதிவில், இந்திய பிரதமர் மோடியுடன் நடந்த உரையாடலை எண்ணி பெருமைப்படுகிறேன், தன்னுடைய அருமையான நண்பர் மற்றும் மதிப்புள்ள தலைவர். மோடியுடனான உரையாடலில் வர்த்தகம், ரஷ்யா-உக்ரைன் போர் என பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி அளித்ததாகவும், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
இது உண்மையில் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று குறிப்பிட்ட டிரம்ப், இந்தியா உடனான பரஸ்பர வரியை 25% இருந்து 18% ஆக குறைக்க இருதரப்பு ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி நன்றி
இந்நிலையில் டிரம்பின் வரி குறைப்பு அறிவிப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள X தளப்பதிவில், 140 கோடி இந்திய மக்களின் சார்பாக டிரம்புக்கு நன்றி. உலக அமைதிக்கும், பொருளாதார வளத்திற்கும் டிரம்பின் தலைமை மிக முக்கியமானது, அமைதிக்கான டிரம்பின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.
Wonderful to speak with my dear friend President Trump today. Delighted that Made in India products will now have a reduced tariff of 18%. Big thanks to President Trump on behalf of the 1.4 billion people of India for this wonderful announcement.
— Narendra Modi (@narendramodi) February 2, 2026
When two large economies and the…