மோடியின் தமிழக வருகை திடீர் ரத்து ? காரணம் என்ன ?
மதுரையில் ஜனவரி 12-ம் தேதி பா.ஜ.க. சார்பில் மோடி பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் விழா நடத்தப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக தகவல் வெளியானது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி , பொங்கல் விழாவில் பங்கேற்ற பின் ஹெலிகாப்டர் மூலம் விருதுநகரில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளதாகவும் தமிழக பாஜக பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா ஒமைக்ரான் அதிகரிப்பு காரணமாக பிரதமர் பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்தி வைக்கபட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், புதுச்சேரிக்கு பிரதமர் வருவதும் உறுதியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது