பிரதமரின் தமிழக வருகை: ட்விட்டரில் டிரெண்டாகும் #GoBackModi... #TNWelcomesModi!

minister kerala bjp prime
By Jon Feb 14, 2021 06:40 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று காலை தமிழகம் வருகிறார். இதற்காக அவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு விட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி. கொரோனா காலகட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுவே முதல் முறையாகும் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை நேரு உள்நாட்டு விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார் பிரதமர் மோடி.

பொதுவாக பிரதமர் சென்னைக்கு வரும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆவது வழக்கம். அதேபோல் இந்த முறையும் நேற்று மதியத்தில் இருந்தே #GoBackModi டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

பல்வேறு தரப்பினரும் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரதமரை வரவேற்கும் விதமாக #TNWelcomesModi என்ற ஹேஸ்டேகும் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.