1ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
government
dmk
vote
By Jon
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மார்ச் 1ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கடந்த 14ம் தேதி சென்னை வந்து மெட்ரோ விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டபணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில் மார்ச் 1ம் தேதி மீண்டும் அவர் தமிழகம் வரவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகம் வரும் பிரதமர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க இருக்கிறார். அதற்கு முன்னதாக வரும் 27ம் தேதி கேரளாவிற்கும், 28ம் தேதி மேற்கு வங்கத்திற்கும் அவர் செல்லவிருப்பதாகவும், அதைத்தொடர்ந்து மார்ச் 1ம் தேதி தமிழகம் வரவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.