ரயில் வராத தாண்டவாளத்தில் தலை வைத்தது போல் ஸ்டாலின் பேசுகிறார் : அண்ணாமலை கிண்டல்
திமுக அரசு செய்த இரண்டு மிகப் பெரிய ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை :
தமிழக மக்களுக்கு நேற்றைய தினம் ஒரு சரித்திர நாள் என்று பேசினார் , மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழ் மொழியினை உயர்த்திப் பிடித்திருப்பதகா கூறினார்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக உள்ளதாக கூறிய அண்ணாமலை, தொடர்ந்து கல்வியை அழித்ததற்கான பட்டத்தை திமுகவுக்குத் தான் தர வேண்டும்.

சமூக நீதி பற்றி பிரதமர் மோடி இருந்த மேடையில் மு.க.ஸ்டாலின் பேசியது எள்ளி நகையாட வேண்டிய விஷயம் தான். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த எல்.முருகனும் பிரதமர் அருகில் மேடையில் அமர்ந்திருந்தார்.
இதுதான் சமூக நீதி என்று கூறிய அண்ணாமலை , ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து விட்டு தமிழ் மொழியை காப்பது போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். ஜூன் முதல் வாரத்தில் திமுக அரசு செய்த மிகப்பெரிய இரண்டு ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன்.
இனி ஒவ்வொரு துறை வாரியாக ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என கூறினார்