எனது மாணவ குடும்பமே - தமிழில் பிரதமர் மோடி உரை..!

M K Stalin Narendra Modi Tamil trichy
By Karthick Jan 02, 2024 06:21 AM GMT
Report

பட்டங்களை அளித்த பிரதமர் மோடி, தனது உரையை துவங்கி மாணவர்களை குதூகலப்படுத்தினார்.

எனது மாணவ குடும்பமே...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பட்டமளிப்பு விழாவில், முனைவர் பட்டங்களை வழங்கி கௌரவித்தார் பிரதமர் மோடி வணக்கம் - எனது மாணவ குடும்பமே என்று சொல்லி உரையை துவங்கிய பிரதமர் மோடி, மிக அழகிய மாநிலமான தமிழகத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

modi-starts-his-talk-in-english-in-convocation

புத்தாண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இந்த பட்டமளிப்பு விழா, இந்த விழாவில் பங்கேற்பது எனக்கு சிறப்பான ஒன்று என்றார்.

பாரதிதாசன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முதல் பிரதமர் என்பதில் தனக்கு மகிழ்ச்சி என குறிப்பிட்ட அவர், இளைஞர்கள் அதிகம் இருக்கும் தமிழகத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

பாரதிதாசன் கவிதை

வராலற்றில் பல மாற்றங்களை, சாதனைகளை காரணமாக இருந்தவர்கள் மாணவர்கள் என்று பாராட்டிய அவர் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து இந்தியா சாதனை படைத்தது வருவதாக கூறினார்.

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா..? ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை தகவல்..?

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா..? ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை தகவல்..?

பண்டைய காலங்களில் காஞ்சி, மதுரை நகரங்கள் கல்வியில் சிறந்து விளங்கின என சுட்டிக்காட்டிய அவர், தங்கப்பதக்கங்களை பெற்றவர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.

modi-starts-his-talk-in-english-in-convocation

கற்ற கல்வியையும், அறிவியலும் வேளாண்மையை மேம்படுத்த, விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டும் என்று கூறிய அவர், புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசனின் கவிதை வரிகளை மேற்கொள்ள காட்டினார் பிரதமர் மோடி. கற்கும் கல்வி, அறிவை வளர்ப்பதோடு, சகோதரத்துவம், நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.