‘’ ஆட்சிக்கு வரமுடியவில்லை என்ற அகங்காரம் தான் காங்கிரஸிற்கு ‘’ - ராகுல் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, “ 1967-க்கு பிறகு காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியவில்லை.
பல மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சியில் அனுமதிக்க மக்கள் விரும்பவில்லை. பல இடங்களில் ஆட்சி கைவிட்டுப்போன பிறகும், காங்கிரஸுக்கு ஆணவம் மட்டும் குறையவில்லை” என்று பேசினார்.
மேலும், கொரோனா பேரிடருக்குப் பிறகு புதிய உலக நாடுகள் வரிசை உருவாகியுள்ளது; நாம் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். உலகளாவிய தலைமைப் பாத்திரத்தை இந்தியா ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசினார்.
[
ஏழை மக்களுக்கு கியாஸ் சிலிண்டர், வீடு, கழிப்பறைகள், வங்கிக்கணக்குகள் கிடைத்துள்ளன; ஆனால், சிலரது (எதிர்க்கட்சியினர்) சிந்தனைகள் 2014ம் ஆண்டிலேயே இருப்பதாக பேசினார்.
மேலும், கொரோனா முதல் அலையின் போது மும்பையில் காங்கிரஸ் கட்சி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரயில் டிக்கெட் எடுத்து கொடுத்தது; அதனால்தான், உ.பி., உத்தரகாண்டில் வைரஸ் பரவல் அதிகரித்தது - பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.