தமிழக அரசு என்னுடைய கோட்பாடை சொல்ல விடுவதில்லை - பிரதமர் வேதனை
தூத்துக்குடியில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி குறித்த என்னுடைய கோட்பாடை வெளியிட தமிழக அரசு விடுவதில்லை என வருத்தம் தேய்வித்துள்ளார்.
பிரதமர் நிகழ்ச்சி
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று பல்லடம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இன்று தூத்துக்குடியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர், 17 ஆயிரம் கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை தமிழ்நாட்டின் தூத்துக்குடி எழுதுகிறது என்று கூறினார். ம
க்களுக்காக திட்டங்களை துவங்குவது என்பது அனைவரின் முன்னேற்றம், வளர்ச்சி, நம்பிக்கையின் எடுத்துக்காட்டி என்று தெரிவித்து, காங்கிரஸ் ஆட்சியில் காகித வடிவில் இருந்து நலத்திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
விடுவதில்லை...
தொடர்ந்து பேசிய அவர், மக்களின் சேவகனான தான் மக்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் கோரிக்கைகளாக இருந்த திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் இணைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதன் மூலம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் நல்லுறவு வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன என குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, வளர்ச்சிக்கான தன்னுடைய கோட்பாட்டை செய்தியாக வெளியிட தமிழக அரசு விடுவதிலளி என்றும் வேதனை தெரிவித்தார்.