சில நாடுகள் பயங்கரவாதத்தை கேடயமாக பயன்படுத்துகிறது: ஐ.நாவில் கொந்தளித்த மோடி
உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. சில நாடுகள் பயங்கரவாதத்தை அரசியல் கேடயமாக பயன்படுத்துகிறது என மோடி பாக்.,மீது குற்றம் சாட்டினார்.
நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.,சபையின் 76 வது பொது கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலகம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மோசமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது.
கொடிய கொரோனாவுக்கு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். எங்களது பன்முகத்தன்மை ஜனநாயகத்தின் வலிமையாக உள்ளது துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம். வலிமையான ஜனநாயகம் இந்திய ஜனநாயகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறினார்,
மேலும் சில நாடுகள் பயங்கரவாதத்தை அரசியல் கேடயமாக பயன்படுத்துகிறது பிற்போக்கு சிந்தனை அதனால் உருவாகும் பயங்கரவாதத்தை உலகநாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும். வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்பது அனைவரையும் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் குழந்தைகள் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்.கடைக்கோடி மக்களுக்கும் திட்டங்கள் சென்றடையும் வகையில் திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள தடுப்பூசி தாயாரிப்பாளர்கள் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க முன் வர வேண்டும். ஏழைமக்களுக்கு வீடுகள் இலவசமருந்துகளைஇந்திய அரசு அளித்து வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.