சனாதனத்தை ஒழிக்க "இந்தியா" கூட்டணி முயற்சிக்கிறது...பிரதமர் குற்றச்சாட்டு!!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை தொடர்ந்து பிரதமர் மோடி, இந்தியா கூட்டணி சனாதனத்தை ஒழிக்க முயற்சிக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் குற்றச்சாட்டு
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா கூட்டணி கட்சிகள் சனாதனத்தை ஒழிக்க முயற்சித்து வருகின்றது என குற்றச்சாட்டி, சனாதனம் மீதான தாக்குதல் நாட்டின் கலாச்சாரம் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் இருக்கும் சனாதன வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், சனாதனத்தை எவ்வளவு தாக்கி பேசினாலும், அது வளர்ந்து கொண்டே தான் இருக்கும் என பேசியிருக்கின்றார்.
தலைகனம் பிடித்த இந்தியா கூட்டணி
விவேகானந்தர், லோக்மான்ய திலகிற்கு உத்வேகம் அளித்த சனாதனத்தை இந்தியா கூட்டணி அழிக்க நினைக்கிறது என சாடி முதற்முறையாக அமைச்சர் உதயநிதி பேச்சில் எழுந்த சனாதன சர்ச்சையில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் "கமண்டியா" அதாவது தலைகனம் பிடித்தவர்கள் என கண்டித்து பிரதமர் மோடி பேசினார். சனாதனத்தை தாக்குபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என குறிப்பிட்ட அவர், எந்த மதத்தை குறித்து யாரும் தாக்கி பேசக்கூடாது என பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.