காங்கிரஸ் இந்தியாவையே சிறைச்சாலையாக மாற்றியது - பிரதமர் மோடி காட்டம்

Indian National Congress Narendra Modi India
By Karthikraja Dec 14, 2024 08:30 PM GMT
Report

காங்கிரஸ் கட்சியின் பாவங்களுக்கு இனி விமோசனமே இல்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அரசியலமைப்பு 75 ஆண்டுகள்

நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இரு நாட்கள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. 

modi about constitution 75 years

இன்று(14.12.2024) பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். இதில் பேசிய அவர், "உலகின் பல்வேறு நாடுகள் பெண்களுக்கு ஓட்டுரிமையை நீண்ட நாட்களுக்கு பிறகே வழங்கின. நமது அரசியலமைப்பு பெண்களுக்கு ஆரம்பம் முதலே ஓட்டுரிமை வழங்கியது. இதனால்தான் இந்தியா ஜனநாயகத்தின் தாய் என அழைக்கப்படுகிறது.

எமர்ஜென்சி

அரசமைப்பின் 75 ஆண்டை கொண்டாடும் வேளையில், எமர்ஜென்சி காலத்தைப் பற்றி பேச வேண்டியது அவசியம். அரசமைப்பின் 25-வது ஆண்டை கொண்டாடும்போது எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு, அரசியலமைப்புக்கு முடிவுரை எழுதப்பட்டது. 

modi about constitution 75 years

மீடியா சுதந்திரம் நசுக்கப்பட்டது. நாடு முழுதும் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அவசர நிலை கொண்டு வந்த காங்கிரசின் நெற்றியில் உள்ள கறை அழியாது. ஜனநாயகத்தை நெரித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் கழுவ முடியாது.

குடும்ப ஆட்சி

தன்னுடைய பதவியை காப்பாற்றவே இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தார். நமது பாதையில அரசியலமைப்பு குறுக்கிட்டால் அதனை மாற்ற வேண்டும் என நேரு கூறினார். 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் ஒரே குடும்பம் ஆட்சி செய்தது.

ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் சீர்குலைப்பதற்கு கிடைத்த எந்தவொரு வாய்ப்பையும் அந்த குடும்பம் விட்டு வைக்கவில்லை. அக்குடும்பம் அரசியலமைப்பை அதிகம் காயப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் பாவங்களுக்கு இனி விமோசனமே இல்லை.அரசியலமைப்பு இல்லை என்றால், எங்களை போன்றவர்கள் இங்கு வந்திருக்க முடியாது" என பேசினார்.