அயோத்தியில் நாம் பார்த்தவை - வருடங்கள் கடந்தும்..! பிரதமர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த வீடியோ

Narendra Modi Ayodhya Ayodhya Ram Mandir
By Karthick Jan 23, 2024 09:56 AM GMT
Report

நேற்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை குறித்து நெகிழ்ச்சியுடன் நாட்டின் பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் பதிவு

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரதமர் மோடி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டைக்காக நுழைவது, ராம பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தியது போன்றவை இடம்பெற்றிருந்தன.

modi-shares-video-of-ayodhya-temple-

மேலும், கோவில் கருவறையில் நடைபெற்ற பூஜைக் காட்சிகளும் இடம் பெற அதன் பின்னணியில், பிரதமர் ,மோடி நேற்று அயோத்தியில் ஆற்றிய உரையும் இடம்பெற்றுள்ளது. நேற்று முதல் ராமர் கோவில் குறித்து பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியின் வீடியோ வைரலாகி வருகின்றது.

நேற்று மதியம் 12:29 மணிக்கு பாலராமரின் சிலை பிராண பிரதிஷ்டை நடைபெற்று முடிந்த நிலையில், அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.