நாகர்கோவிலில் இன்று பிரதமர் மோடி Road Show

Narendra Modi Nagercoil
By Fathima Apr 15, 2026 04:10 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் இன்று பிரதமர் மோடி Road Show செல்கிறார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது, கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார் மோடி, இதற்காக இன்று நாகர்கோவிலில் Road Show நடத்துகிறார்.

நாகர்கோவிலில் இன்று பிரதமர் மோடி Road Show | Modi Road Show In Nagercoil

பிற்பகல் 3.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகொப்டரில் 4.10 மணியளவில் நாகர்கோவில் வருகிறார்.

மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை வெப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி Road Show செல்ல உள்ளார்.

தொடர்ந்து 5.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் புறப்படுகிறார், அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

நாகர்கோவிலில் இன்று பிரதமர் மோடி Road Show | Modi Road Show In Nagercoil