மக்களவை தேர்தல்; 3ம் கட்டம் வாக்குப்பதிவு - நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்!
நாட்டில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகின்றது.
மக்களவை தேர்தல்
நடப்பாண்டில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்டின் அடுத்த அரசை முடிவு செய்யும் மக்களவை தேர்தல் நடந்து வருகின்றது. 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக, எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி என இரு முனை போட்டி தீவிரமாக உள்ளது.
ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய நாட்களில் 2 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 3-ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது. மொத்தம் 93 தொகுதிகளுக்கு குஜராத் - 25, மகாராஷ்டிரா - 11, உத்தரப் பிரதேசம் - 10, மத்தியப் பிரதேசம் - 9, சத்தீஸ்கர் - 7, பீகார் - 5, அசாம், மேற்கு வங்கம் - தலா 4, கோவா, தாத்ரா நாகர் ஹவேலி,
வேண்டுகோள்
டையூ டாமன் தலா 2 என வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில், தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உலகில் ஜனநாயக நாடுகளுக்கு உதாரணமாக இந்தியாவின் தேர்தல் நடைமுறை உள்ளது. ஜனநாயகத்தைக் கொண்டாடுவது போல தேர்தல் அமைந்துள்ளது. இந்த ஆண்டு நாட்டு மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு செலுத்த வேண்டும்.
ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். மேலும்,வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும்" என்று கூறினார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் வருகை தந்திருந்தார். இதனையொட்டி நிஷான் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.